2 மாதங்களின் பின்னர் எகிறிய தொற்றாளர் எண்ணிக்கை: நேற்று 578 பேருக்கு தொற்று!

Date:

இரண்டு மாதங்களின் பின்னர் இலங்கையில் நேற்று (21) கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்தது. நேற்று 578 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 98,050 ஆக உயர்ந்தது.

நாட்டில் கடைசியாக பெப்ரவரி 22ஆம் திகதி அன்று 518 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 516 பேர், மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அண“மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 62 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி 3,752 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 121 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 93,688 ஆக உயர்ந்தது. 483 பேர் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதம நீதியரசரின் கணவர் கைது!

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின்...

உருத்திரபுரம் யுவதி மரணம்: நீதி விசாரணைகோரி போராட்டம்!

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி: MOH அலுவலகம் அவசர எச்சரிக்கை

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி: MOH அலுவலகம் அவசர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்