உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த கொடூர தாக்குதலில் தனது கணவன், இரண்டு பிள்ளைகளை இழந்த பெண்ணொருவரின் மனதை உருவ வைக்கும் பதிவும், புகைப்படமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கட்டுவபிட்டி தேவாலயத்தில் 2019 உயிர்த்த ஞாயிறு திருப்பதியில் திருமதி நிரஞ்சலி யசவர்தன தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் அவரது கணவன், இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
கணவர் மற்றும் பிள்ளைகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு சென்று அவர் இன்று அஞ்சலி செலுத்தினார். இதன்போது, அவர் தலையை மழித்திருந்தார்.
அஞ்சலிக்கு புறப்படுவதற்கு முன்பு, அவர் தனது முக புத்தகத்தில் எழுதிய குறிப்பு இது-
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற ஒரு நாளில், மனைவி மற்றும் தாய் என்ற இரு அந்தஸ்தும் மனிதாபிமானமற்ற முறையில் என்னிடமிருந்து பறிக்கப்பட்டன. ஒரு தாயாக நான் செய்த அனைத்து தியாகங்களும் கடமைகளும் பூஜ்ஜிய மதிப்பாகியுள்ளன, இன்று வாழும் போராட்டத்தில் நான் திகைத்து நிற்கிறேன்“ என பதிவிட்டுள்ளார்.