கதிரியக்கக் கொள்கலன்கள் இருப்பதை மறைத்து, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று நுழைந்த விவகாரத்தில், கப்பலின் உள்ளூர் முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அணுசக்தி ஒழுங்குபடுத்தல் நிறுவகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்திற்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் நிறுவகம் கூறுகிறது.
நெதர்லாந்தின் ரொட்டடாம் நகரத்திலிருந்து சீனாவிற்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட்டின் சரக்குகளை ஏற்றிச் சென்ற, M.V. BBC Naples என்ற கப்பலே நேற்று முன்தினம் (20) இரவு துறைமுகத்திற்குள பிரவேசித்தது. ஆன்டிகுவா & பார்படோஸில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இது.
கப்பலுக்கான முகவரான திருமதி பார்வில் மெரிடியன், கப்பல் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் கப்பலில் ஆபத்தான சரக்கு இருப்பதாக துறைமுக அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.
எனினும், பின்னர் கதிர்வீச்சு பொருட்களின் இருப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.