24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
கிழக்கு

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம்!

நோன்பு காலத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்பதை கண்டிப்பாக குறிப்பிட்டுள்ளோம். அதே போன்று நுகர்வோரிடம் வர்த்தக நிலையத்தில் பொலித்தீன் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் இன்றி உள்ள வர்த்தகர்களிடம் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளோம்.நோன்பு காலத்தில் தொடர்ச்சியாக இதனை செயற்படுத்த நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்பினை நாடியுள்ளோம் என கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க பிரதிச்செயலாளர் எஸ்.எல்.ராயீஸ் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் புதன்கிழமை (21) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கொரோனா தடுப்பு முன்னெடுப்புகளில் எம்மோடு இராணுவத்தினர் கல்முனை பொலிஸார் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவினர் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக கொரோனா தடுப்பினை மேற்கொண்டிருந்தோம்.இது போன்று இனிவரும் காலங்களிலும் இவர்களின் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பு முன்னெடுப்புகளை தொடர்ந்து செயற்படுத்துவோம்.எமது பொதுச்சந்தை கொரோனா அனர்த்தம் காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தது.

தற்போது எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் 3 ஆவது அலையாக உருவாகி இருக்கின்றது என்பதை சுகாதார பிரிவினால் அறியப்பெற்றிருந்தோம்.இந்த கொரோனா வைரஸ் தடுப்பு சம்பந்தமாக ஏற்கனவே எவ்வாறான தடுப்பு செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்.அது மாத்திரமன்றி கடந்த காலங்களில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சிறப்பாக தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு வந்தோம்.

தற்போது மீண்டும் 3 ஆவது கொரோனா அலை உருவாகும் இந்த சந்தர்ப்பத்திலும் தடுப்பு செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.எமது சந்தை தொகுதியில் சுகாதார நடைமுறைகளை எவ்வாறு நுகர்வோர் வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கை ஒலிபெருக்கி ஊடாகவும் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக பெறுதல் என்பதை தினந்தோறும் நாங்கள் அறிவித்து கொண்டு வருகின்றோம்.அது மாத்திரமன்றி எமது சங்கத்தினால் சுவரொட்டி ஊடாக அறிவுறுத்தல்களை வழங்கி காட்சி படுத்தி வைத்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் போன்று மாநகர சபையின் உதவியுடன் தண்ணீர் பௌசர்களை கொண்டு நுகர்வோருக்கு கைகழுவுதல் செயற்பாட்டை செயற்படுத்தியுள்ளோம்.முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.

அதாவது வர்த்தகர்கள் நுகர்வோர்கள் வாய் மூக்கு மூடப்பட்டுள்ள நிலையில் வை அணிந்திருக்க வேண்டும்.இது சம்பந்தமாக எமது வர்த்தகர்களை அறிவுறுத்தியுள்ளோம்.அதாவது பொருட்களை கொள்வனவு செய்ய வரும் மக்கள் முறையாக முகக்கவசம் அணியாது வந்தால் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்பதை கண்டிப்பாக குறிப்பிட்டுள்ளோம்.அதே போன்று நுகர்வோரிடம் வர்த்தக நிலையத்தில் பொலித்தீன் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் இன்றி உள்ள வர்த்தகர்களிடம் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளோம்.நோன்பு காலத்தில் தொடர்ச்சியாக இதனை செயற்படுத்த நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்பினை நாடியுள்ளோம் என கூறினார்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தளம் அமைப்பின் விடியல் 3.0 பயிற்சி பட்டறை ஆரம்பம்

east tamil

குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவந்தவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

east tamil

தும்பங்கேணியில் யானைகள் அட்டகாசம்

east tamil

நீரோடையில் விழுந்து குழந்தை பலி

Pagetamil

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

Leave a Comment