27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அஞ்சலி!

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களின் 2 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இன்றைய தினம் புதன் கிழமை (21) மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மாலை அனுவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சர்வ மத தலைவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

east tamil

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம்: சீ.வீ.கே. நன்றி!

Pagetamil

கடவுச்சீட்டு தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கேள்வி

east tamil

திருடிய இடங்களில் “BATMAN” என எழுதி வைத்த திருடன் சிக்கியது எப்படி?

Pagetamil

இள வயது பெண்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு: சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

east tamil

Leave a Comment