30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு முக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் குண்டு தாக்கப்பட்டு புனரமைக்கப்படாத பள்ளிவாசலினால் சஹ்ரான்கள் உருவாக வாய்ப்பு: வியாழேந்திரன் எச்சரிக்கை!

மட்டக்களப்பு – செங்கலடி புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு முற்போக்குத்தமிழர் அமைப்பபின் ஏற்பாட்டியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவுகள், மதகுருமார், முற்போக்கு அமைப்பின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மாலை 06.00 மணியளவில் நினைவுத்தூபியில் தீச்சுடர் ஏற்றி, மலர் அஞ்சலியுடன் 2நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,

கடந்த கால அரசாங்கத்திலே இந்த குண்டுவெடிப்பு நடப்பது தொடர்பாக ஏற்கனவே சொல்லப்பட்டது. சில அரசியல் வாதிகளுக்கு தெரிந்திருந்தது. சில அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களுக்கு தொரிந்திருந்தது அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டார்கள் கடந்த அரசாங்கத்தை நடாத்திய தற்போதைய எதிர்க்கட்சியினர்.

சஹரான் என்பவர் திடீர் என உருவாகியவர் அல்ல. ஒருசில மதத் தலைவர்களும் ஒரு சில அரசியல் தலைவர்களுடைய உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள். ஒரு இனத்திற்கு எதிராக ஒரு மதத்திற்கு எதிராக சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டக்கூடிய பேச்சுக்கள் நடவடிக்கைகதான். ஐ.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் அடிப்படை நோக்கமே ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவது.

90களிலே காத்தான்குடியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்திலே குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லுகின்ற சிறுவர்கள் இளைஞர்கள் அவற்றைப் பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத்தான் மாறுவார்கள். இன்னமும் சஹரான்கள் உருவாகுவாக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.

சில மதத்தலைவர்களுடைய பேச்சுக்கள் ஒரு இனத்தை உணர்ச்சியூட்டி இன்னொரு இனத்திற்கு எதிராக தற்கொலை குண்டுதாரியாக மாறுமளவிற்கு கொண்டுசெல்கிறது.

பாராளுமன்றத்தில் சில அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. வடகிழக்கு இணைத்தால் இரத்த ஆறு ஓடும் இது ஒரு தனி தாயகம் என்றெல்லாம் பேச்சினார்கள். இவ்வாறான பேச்சுதான் வளர்ந்துவரும் சமூதாயத்திற்கு ஒரு உணர்வை ஊட்டி அது இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக மாறுகிறது.

மீண்டும் இவ்வாறன ஒரு துன்பியல் சம்பவம் அவல நிலைமை ஏற்படக்கூடாது.

இந்த அரசாங்கம் இது தொடர்பில் அதி தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.

காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு பள்ளிவாசலிற்குள் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுகூர்வதாக குறிப்பிட்டு, பள்ளிவாசல் புனரமைக்கப்படாமலுள்ளதுடன், அந்த கொலைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என முஸ்லிம் தரப்பு குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

1.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

Leave a Comment