26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

டிக்கோயாவை சேர்ந்தவர் முல்லைத்தீவில் மர்ம மரணம்!

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நேற்று இரவு வீதியில் படுகாயமடைந்த நிலையில் இருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ஹற்றன் டிக்கோயா பகுதியை சேர்ந்த நல்லு சிவராசா (36) என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்று வந்துள்ளார்.

இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

நேற்று தண்ணீரூற்று பகுதியில் வீதியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார் இவரை அவசர நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்​

விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

மரணம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

விபத்து காரணமாக இவர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment