ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு ஊசி மருந்தினை 40 வயது உடையவர்களுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் கிரிஸ்டின் எல்லியட் ஞாயிற்றுக்கிழமை மாலை அன்று வயது வரம்பு மாற்றத்தினை அறிவித்தார்.
அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்தினை செலுத்தும் வயது வரம்பினை விரிவுபடுத்தும் பல்வேறு கோரிக்கைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் covid-19 வைரஸ் தொற்று பாதிப்படைந்து அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தடுப்பு ஊசி மருந்தினை செலுத்தும் வயதுவரம்பு விரிவாக்கம் செய்வதன் மூலமாக வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக பரவுவதை கட்டுப்படுத்த இயலும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராரியோ மாகாண சுகாதார அமைச்சர் கிரிஸ்டின் எல்லியட் தற்பொழுது 40 வயது உடையவர்களிலிருந்தே தடுப்பூசி மருந்து செலுத்தும் செயல்பாடுகள் ஆரம்பமாவது மட்டுமே தன்னால் உறுதியாக கூற இயலும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது NACI பரிந்துரையின்படி 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு அஸ்திரா ஜெனிகா தடுப்பு ஊசி மருந்தினை செலுத்தலாம் என்ற தீர்மானத்தினை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்தினை செலுத்தியதன் காரணமாக ரத்தம் உறைதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டதால் முறையான பரிசோதனையின் பின்னரே அனைவருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.