25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

நட்புக்காக உதவிய யோகி பாபு: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த படக்குழுவினர்!

கோபி கிருஷ்ணா தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாயே பேயே’ திரைப்படத்தின் விளம்பர பாடலுக்காக சம்பளம் வாங்காமலே நடித்து கொடுத்துள்ளார் யோகி பாபு.
நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் சக்திவாசன் இயக்கியுள்ள திரைப்படம்நாயே பேயே’. இந்த படத்தின் விளம்பர பாடலுக்காக நடனமாடி கொடுத்துள்ளார் யோகி பாபு. அண்மையில் வெளியான இந்த பாடலின் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நட்புக்காக சம்பளமே வாங்காமல் இந்த பாடல் காட்சியில் நடித்து கொடுத்த யோகி பாபுவை படத்தின் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணா பாராட்டியுள்ளார்.

வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட தரமான கதையம்சம் கொண்ட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் சக்திவாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘நாயே பேயே’. ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் வளர்ந்து வருபவர் யோகி பாபு. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘மண்டேலா‘ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் சம்பளம் வாங்காமலே நடித்து கொடுத்துள்ளார் யோகி பாபு.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணா கூறும் போது, படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால் அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு தன்னுடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று எண்ணிய அவர் கொடுத்த ஐடியாவால் உருவானது தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார். சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்து கொடுத்தார்.

பிஸியாக உள்ள போதும் நட்புக்காக யோகி பாபு செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர். மேலும் இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு வியாபாரத்துக்கும் உதவியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘நாயே பேயே’ திரைப்படம் வருகிற 23 ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

Leave a Comment