நேற்று 309 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 97,105 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 282 பேர், மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,634 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 18 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது, 3,111 நபர்கள் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 261 நபர்கள் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,374 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சந்தேக்தில் 604 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.