24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய மொயின் அலி ; மன்னிப்பு கேட்ட ரசிகர்கள்!!

ஐபிஎல் 14ஆவது சீசனின் 12ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் சொதப்பினாலும், அடுத்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிபெற்றது. அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கெத்துகாட்டி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

மொயின் அலி பேட்டிங்:

மும்பை வான்கடே மைதானத்தில் 200 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதைக் கடந்த சில போட்டிகள் நிரூபித்துள்ளது. இதனால், முதலில் களமிறங்கிய சிஎஸ்கே மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது ஆனால், சிஎஸ்கேவில் ஒருவர் கூட அரை சதம் கடக்கவில்லை. மூன்றாவது இடத்தில் களமிற்கிய மொயின் அலி 20 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்தார். இவர் போட்டியில் மட்டுமல்ல இதற்குமுன் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் 36 (24), 46 (31) சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பந்துவீச்சு:

பந்துவீச்சிலும் எந்த குறையும் இல்லை. ரன்களை அதிகம் விட்டுக்கொடுக்காமல் அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்திக்கொடுக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். ராஜஸ்தானை வீழ்த்தியதில் மொயின் அலியின் பங்கு மிகமுக்கியமானது. இதனால், ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தின்போது, மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அணி ஏற்கனவே முதியவர் இல்லம்போல் இருக்கிறது. இதனால், இளம் வீரர்களை ஏலம் எடுக்காமல் மொயின் அலியை 7 கோடிக்கு ஏன் எடுத்தீர்கள் என ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

தற்போது மொயின் அலி அணியின் நம்பிக்கை நடத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். இதனால், முன்பு விமர்சித்த ரசிகர்கள் தற்போது மன்னிப்பு கேட்டு வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

Leave a Comment