யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீள திறக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் இருந்த நினைவுத்தூபி, அரசின் உத்தரவிற்கமைய பல்கலைகழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.
இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல்கலைகழக மாணவர்கள், அனைத்து தமிழ் மக்கள், இந்தியா, சர்வதேச அமைப்புக்கள், தூதர்கள் என பல மட்டங்களில் எதிர்ப்பு வெளியானது. மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் சிறு சலசலப்பு என வீம்பாக இருந்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இறங்கி வந்து, இருட்டோடு இருட்டாக மாணவர்களை சமாதாப்படுத்தி, மீண்டும் நினைவுத்தூபி அமைக்க அடிக்கல் நாட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கட்டுமான பணிகள் ஆரம்பித்தன.
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் என்ற பெயரில் அமைக்கப்படும் நினைவுத்தூபி, வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.