Pagetamil
சினிமா

விவேக் குறித்து இசைஞானி வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ!

மறைந்த நடிகர் விவேக் குறித்து இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ.
விவேக்கின் திடீர் மறைவினால் திரைத்துறையினரும், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் சோகத்தில் இருந்து மீளாமல் பலரும் சின்ன கலைவாணரின் மறைவு குறித்து பேசி வருகின்றனர். திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் நடிகர் விவேக்குடன் திரைப்படங்களில் செலவழித்த நாட்கள், அவரின் மற்றொரு பக்கம் குறித்து உணர்ச்சி பொங்க கூறி தங்களின் இரங்கல்களை பதிவு செய்தி வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவிவேக் மறைவு குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து, இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், விவேக்கின் மறைவு என் மனதை நொறுங்கச் செய்து விட்டது. என்னால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இந்த செய்தியை கேட்டது முதல் என்னால் துக்கம் தாங்க முடியவில்லை.

என் மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை வைத்திருந்தார் நடிகர் விவேக். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போதே என் தீவிர ரசிகராக இருந்தார். அவர் சமீபத்தில் என்னை சந்தித்து, தான் தற்போது செய்து வரும் வேலைகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

விவேக் எப்போதும் தன் வாழ்க்கையை பற்றிய விஷயங்களை என்னிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்வார். அவரது முயற்சிகள், முடிவுகள் குறித்து என்னிடம் கேட்பார். நான் அவரது முயற்சிகளை ஊக்குவிப்பேன். சில உதவிகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வேன். அவர் சமீபத்தில் ஸ்டூடியோவிற்கு வந்து என்னை சந்திக்க அனுமதி கேட்டு சந்தித்தார்.

என் மீது அவ்வளவு பாசம் கொண்ட ஒரு ரசிகரை இனி எப்போது பார்ப்பேன் என தெரியவில்லை. அவர் மட்டுமல்ல அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் என் மீது பாசமும், மரியாதையும் வைத்துள்ளனர். அவரின் மறைவு எங்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் தைரியத்தை அவர்களுக்கு இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இந்த பெருந்துயரில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என கூறியிருந்தார்.

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த விவேக் பியோனா வாங்கி இருப்பதாக கூறி, அதில் தான் வாசித்த உன்னால் முடியும் தம்பி திரைப்பட பாடலையும் போட்டு காட்டினார் விவேக். இசைஞானியின் புகைப்படத்தையும் கையெழுத்தையும் எனது பியானோவில் விரைவில் பதித்து, அதை இசைஞானி முதன் முதலில் வாசிக்க வேண்டும் என்றும், அதனை விரைவில் இளையராஜா நிறைவேற்றி தருவதாகவும் கூறியிருந்தார். அவரின் ஆசை நிறைவேறும் முன்னரே இயற்கை அவரை களவாடி கொண்டுவிட்டது.

 

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!