29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

விஜய்யின் ‘மாஸ்டர்’ படபாடலுக்கு நடனமாடிய தீபிகா படுகோன்;வைரலாகும் வீடியோ!!

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தீபிகா படுகோன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய வசூலை பெற்று தந்தது ‘மாஸ்டர்’ திரைப்படம்.

அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பேமஸ். பாடல் வெளியீட்டு விழாவின் போதே, ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் போட்ட ஸ்டெப் டிரெண்ட் ஆனது. திரையரங்கிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் ஆட்டம் போட்டு, விசில் அடித்து கொண்டாடினார்கள்.

அதனை தொடர்ந்து பேமஸான பாடலுக்கு ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் அனைவரும் ஆட்டம் போட்டனர். இந்த பாடலின் வரிகள் புரியாதவர்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் உலகம் முழுவதும் வெளியாகி டிரெண்ட் ஆனது. நஸ்ரியா தொடங்கி கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ வைரலானது.

அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ’வாத்தி கம்மிங்’ பாடல் பின்னணியுடன் அவர் பல்வேறு போஸ்களில் நடந்து வரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவுக்கு BTS of BTS என்று கேப்ஷன் போட்டுள்ளார் தீபிகா படுகோன். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தீபிகா படுகோனின் இந்த வீடியோவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் விரைவில் விஜய்யுடன் இணையுங்கள் என்று அன்பு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment