17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர், பொலிசார் தேடத் தொடங்கியதும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
பின்னவல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
17 வயதான பாடசாலை மாணவியை மிரட்டி பல முறை வல்லுறவிற்குள்ளாக்கிய நபர், அது தொடர்பில் வெளியில் சொல்லக்கூடாதென மிரட்டி வைத்திருந்துள்ளார்.
விடயத்தை அறிந்ததும், மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.
பொலிசார் தேடத் தொடங்கியதும் தலைமறைவான சந்தேகநபர், காட்டு பகுதியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
பலாங்கொட நீதிவான் சடலத்தை பார்வையிட்டு, மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சடலம் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1