கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபை சவால் செய்யும் மனுக்கள் மீதான விசாரணை இன்று (19) ஐந்து பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழாமில் நீதிபதிகள் புவனேக அலுவிஹர, பிரியந்த ஜெயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரும் உள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கைகளிற்கான மையம், ட்ரான்பரன்ஷி இன்ரநஷனல், ஐக்கிய மக்கள் சகதி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி மற்றும் பல தரப்புக்ககளால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்களில் பிரதிவாளிகளாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த சட்ட வரைவின் மூலம் நிறுவப்படும் ஆணைக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்கிறது என மனுதாரர் குறிப்பிடுகிறார்கள்.
அதன்படி, இந்த வரைபை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.