தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை சேர்ந்தவர் அபிராமி. 33 வயதான இவர் பியூட்டி பார்லர் நடத்தி வைக்கிறார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அபிராமிக்கு அச்சன்புதூர் ஊரை சேர்ந்த 20 வயதான காளிராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 13 வயது வித்தியாசமுள்ள இளைஞருடன் அபிராமி பழகி வருவதை காளிராஜ் பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இருப்பினும் வீட்டை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு காளிராஜ் அபிராமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். குத்துக்கல்வலசை இவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு காளிராஜ் காணவில்லை என்று அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.
காளிராஜ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அபிராமி கூறியதுடன், காளிராஜ் என்ன ஆனார் என்பதே தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் தான் காளிராஜ் தாய் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல ஆண் நண்பர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்த அபிராமி கணவர் என்ற அடையாளம் வேண்டும் என்பதற்காகத்தான் காளிராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார். பல ஆண்களுடன் உறவுகொண்ட அபிராமியை காளிராஜ் கண்டித்துள்ளார். இதனால் கணவன் ,மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் காளிராஜ் தன்னைப்பற்றி வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்து அபிராமி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அபிராமி தனது ஆண் நண்பர் மாரிமுத்து மற்றும் சிலருடன் சேர்ந்து காளிராஜை கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டு வாசலில் உடலை குழிதோண்டி புதைத்துள்ளனர். அத்துடன் அந்த இடத்தில் துளசி மாடத்தை அமைத்துள்ளார் அபிராமி.
அபிராமி சொன்ன இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி பார்த்தபோது காளிராஜன் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.
இவை காளிராஜன் எலும்புகள் தானா? என கண்டறிய பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.