பொதுவாக நல்ல உணவுகளை உண்பது என்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உணவுகளை பொறுத்துதான் மன ஆரோக்கியமும் அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயமாகும். எப்போதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை நாம் உண்ண கூடாது அது உடலுக்கு மூளைக்கு என இரு வகையிலும் தீங்கு விளைவிக்க கூடிய உணவாக உள்ளது.
நிறைவுற்ற கொழுப்பு உணவுகள்
நிறைவுற்ற கொழுப்புகள் இவை உங்கள் மூளைக்கு உதவும் தமனிகளின் வழியை அடைத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் எனப்படும் மீன்களில் அதிகப்பட்சமாக காணப்படும் கொழுப்பு அமிலங்கள் தமனிகளை தெளிவாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் இவை உடலில் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உங்கள் மூளை மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளை இப்போது பார்ப்போம்.
விதைகள்
விதைகள் உங்கள் தமனிகளை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. இது மோனோசாச்சுரேட் கொழுப்புகள் மற்றும் செரோடோனின்னை கொண்டுள்ளதால் நல்ல மனநிலையை இது ஏற்படுத்துகிறது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் இந்த விதைகளை உண்பது சரியாக இருக்கும். மேலும் இதன் அதிக கலோரி குறித்து கவனமாக இருக்க வேண்டும். எனவே ஒரு நாளைக்கு சுமார் 12 அக்ரூட் பருப்புகள் அல்லது 24 பாதாம் விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.
மீன்
குறிப்பிட்ட மீன்களான சால்மன், ஜிலேபி, கெளுத்தி போன்ற மீன்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
ஒரு வாரத்திற்கு 13.5 அவுன்ஸ் மீன்கள் அல்லது வாரத்திற்கு மூன்று முறை என நமது உணவில் மீன்களை சேர்த்துக்கொள்ளலாம்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸ் இதயம் மற்றும் தமனிக்கு ஆரோக்கியமான புரதங்களை வழங்குகிறது. மேலும் இது நார்ச்சத்து மற்றும் கொழுப்புகளை கொண்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
ஒரு நாளைக்கு 1 கப் சோயாபீன்ஸ் சாப்பிடலாம்.
தக்காளி சாறு
தக்காளிகளில் தமனிகளை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் ஃபோலெட், லைக்கோபீன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே தக்காளியை சாஸாக மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பழமாகவும் இதை உண்ணலாம்.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் தக்காளி சாறு அல்லது 2 ஸ்பூன் சாஸ்களை பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெய், விதை எண்ணெய், மீன் எண்ணெய், வெண்ணெய்
இந்த எண்ணெய் அனைத்திலும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் மோனோசாச்சுரேட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. எனவே மன
ஆரோக்கியத்தோடு சேர்த்து இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் இந்த எண்ணெய்கள் உதவியாக இருக்கின்றன.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
தினசரி நாம் பெறும் கலோரிகளில் 25 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்புகளாக இருக்க வேண்டும்.
சாக்லேட்
சாக்லேட் 40 சதவீதம் கோகோ கலந்ததாக இருக்க வேண்டும்.
சாக்லேட் டோபமைன் வெளியீட்டை அதிகரிக்கிறது. மேலும் இவை ஃபிளவனாய்டுகளை வழங்குகிறது. மேலும் இது தமனிகளை இளமையாக வைத்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் அளவில் சாப்பிடலாம்.