முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (19) முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2 1/2 கிலோ கிராம் நிறையுடைய திமிங்கலத்தின் ஆம்பல் என்ற பொருளுடன் அனுராதபுரம் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்களும் குறித்த அரியவகை பொருளும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1