25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
குற்றம்

மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை (18) காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் மறைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

அதே நேரம் கேரள கஞ்சாவினையும்,அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்ந்த 25,44,31 வயதுடைய நபர்கள் ஆகும்.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா,மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

Leave a Comment