26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மருத்துவம்

வெயில் நேரத்துல சளி பிடிச்சா உடனே செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் : இதோ 5 ஈஸியான டிப்ஸ்

பருவகால மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக நமது உடலில் வெப்பநிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அளவில் மாறுபாடும் குறைபாடும் உண்டாகிறது. இதனால் சளி மற்றும் இருமல் தொல்லை ஏற்படுகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சினையும் குளிர்காலத்தில் ஏற்படுவதைப் போன்றதே ஆகும்.

பலரும் குளிர்காலத்தில் சளித்தொல்லை போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு இருப்போம். ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. குழம்புவார்கள்.ஆனால் கோடைகாலத்தில் தான் நிறைய பேருக்கு தொடர்ந்து சளி பிரச்சினை இருக்கும். இதை நாம்தான் கவனிப்பதில்லை. எனவே இந்த கோடைகாலத்தில் ஏற்படும் சளி பிரச்சினையில் இருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது? அதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்.

​சிகிச்சைகள்

பெரும்பாலும் கோடை காலத்தில் வைரஸ்களினால் ஏற்படும் சில பிரச்சனைகளை சரிசெய்ய எந்த மருந்துகளும் உதவாது. சளி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் நுண்ணியிரிகள் எதிர்ப்புகளை குறைக்க முடியும். இதுபோன்ற அறிகுறிகளை நிரூபிக்க கீழ்கண்ட சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

வலி நிவாரணிகள்

இருமல் மற்றும் சளி மருந்து

  • தைலங்கள்

கோடை காலத்தில் நீங்கள் இளநீரை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இளநீரை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இளநீரில் வைட்டமின்கள் மற்றும் புரதங்களின் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதால் அது வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

  • ரோஸ் வாட்டர்

உடலின் வெப்பத்தின் அளவை குறைப்பதற்கு ரோஸ் வாட்டரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ரோஸ் வாட்டரில் சிறிது தேன் சேர்க்கப்படுகிறது. சுவைக்க வேண்டுமானால் நீங்கள் இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • பழச்சாறு

கோடைகாலத்தில் வைரஸ்களினால் ஏற்படும் சளித் தொல்லையை சரி செய்ய நீங்கள் பழச்சாறை தேர்வு செய்யலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்கள் உடலுக்கு சிறந்தவை. ஆரஞ்சு, அன்னாசி, தர்ப்பூசணி போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போராடி நம்மைக் காக்கிறது.

  • கிரீன் டீ

கிரீன் டீ தொற்றுநோயை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது. இந்த தேநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாக்டீரியாவை கொள்ள நமக்கு உதவுகிறது. இந்த கிரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்து அருந்தலாம்.

  • மிளகு மற்றும் பூண்டு

சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகு மற்றும் பூண்டு போன்றவை வீட்டு வைத்திய நிவாரணிகள் ஆக பயன்படுகிறது.

  • ​நீராவி

ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

குறிப்பு:

சிறு குழந்தைகளுக்கு இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்த வேண்டாம். இந்த வீட்டு வைத்திய முறையில் சளி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தாலும், இந்த முறைகள் ஆராய்ச்சியில் நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் இந்த கோடை கால சளியை கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. குளிர்காலத்தில் ஏற்படுவது போன்று இதுவும் சாதாரணமான தே ஆகும். இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஒரே வழி ஆரோக்கியமான உணவை கடைப்பிடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஆகும். குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் அடிப்படை சுகாதாரத்தை பேணி காப்பது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment