வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதை கட்டுப்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மத்தியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இது குறித்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களிற்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அதிகரிக்க ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1