‘பிரபலமான என்னுடன் உறவிலிருக்க பெண்கள் விரும்புவார்கள்’: அத்துமீறி நடந்த பிரபல கிரிக்கெட் வீரர் அடித்து துவைக்கப்பட்டார்!

Date:

அண்மையல் மாத்தைறை ஹொட்டலொன்றில் யுவதியுடன் அத்துமீறி நடக்க முயன்று, நையப்புடைக்கப்பட்ட இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் தொடர்புடைய சம்பவம் பற்றி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளின் உண்மையை அறிய, விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தேசிய வீரர்களின் ஒழுக்கம் கண்டிப்பாக கண்காணிக்கப்படும் என்றும், ஒழுங்கு அடிப்படையில் தவறான நடத்தை நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

இந்த நோக்கத்திற்காக, வீரர்களுக்கு பொருந்தக்கூடிய ஒரு புதிய நடத்தை விதி இலங்கை கிரிக்கெட்டால் அறிவிக்கப்பட்டுள்ளது, இது புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் காலத்திலிருந்து செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மாத்தறை ஹொட்டலொன்றில் நடந்த விருந்துவசாரத்தில் விபரீதம் இடம்பெற்றது. நண்பர்களுடன் அளவிற்கதிகமாக மது அருந்திய தேசிய கிரிக்கெட் வீரர் நிதானமிழந்துள்ளார். விருந்திற்கு வந்த யுவதியொருவருடன் உல்லாசமாக இருக்க விரும்பிய அவரை, நண்பர்கள் கட்டுப்படுத்த முயன்றனர்.

எனினும், பிரபலமான நபரான தன்னுடன் உறவை பேண யுவதி விரும்புவார் என கூறிய அந்த கிரிக்கெட் வீரர், யுவதியை அணுகி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார். யுவதி மறுக்க, அவருடன் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளார்.

இதையடுத்து யுவதியின் நண்பர்கள் தலையிட்டு கிரக்கெட் வீரரிடமிருந்த அவரை மீட்டனர். இதன்போது கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்டார்.

யுவதி வெளியேறி சென்ற பின்னர், மீளவும் இளைஞர் குழுவொன்று அங்கு வந்து, கிரிக்கெட் வீரரை நையப்புடைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

நையப்புடைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர், வைத்தியசாலைக்கு செல்ல வெட்கப்பட்டு, சிங்கள நாட்டுப்புற சிகிச்சையை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்