கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு குறித்து அரசாங்கத்தின் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மகாநாயக்கர்களிற்கு விளக்கமளித்துள்ளனர்.
இன்று (18) கண்டிக்கு சென்ற அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களிடம் சட்ட வரைபு குறித்து விளக்கமறித்தனர்.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகித்தனர்.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுடன் பேசிய இராஜாங்க அமைச்சர் கப்ரால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பாக புதிய சட்டவரைபை பற்றி மகாநாயக்கர்களிற்கு விளக்கமளித்ததாக தெரிவித்தார்.
ஏதேனும் கவலைகள் இருப்பில் தெரிவிக்குமாறு மகாநாயக்கர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
சட்டங்களை அமல்படுத்துவது குறித்து தலைமைப் மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். வரவிருக்கும் வாரத்திற்குள் இந்த வரைபு குறித்து பொதுமக்களுக்கு விளக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கப்ரால் குறிப்பிட்டார்.
நாட்டை ஒரு சீன காலனியாக மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று கூறியதுடன், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எதிர்க்கட்சியை வலியுறுத்தினார்.
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பேசிய போது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக வரைபு மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் அரசாங்கத்தின் திட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியாது என்றார்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். தற்போது முழு உலகமும் அவ்வாறு செய்கின்றன.
பொய்யான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஒரு அரசியல் சக்தி இருக்கிறது. ஏனெனில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் எதிர்காலம் இருக்காது என்று எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன.
மகா சங்கத்திற்கு விஷயங்களை விளக்கி, மக்களுக்கு நீதி வழங்குவதற்காக, வரைபு தொடர்பான எந்தவொரு தனிநபருடனும் விவாதம் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுகாதாரம் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டை அதிகரிக்கவும் இது மக்களுக்கு ஒரு வாய்ப்பாகும் என்றார்.
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி மேலும் 10,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதித்துள்ளது, அதே நேரத்தில் இலக்கு 100,000 ஆகும். இது சம்பந்தமாக பொருளாதார வலிமை அவசியம் என்றார்.
தங்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்ற அச்சத்தில் எதிர்க்கட்சி இந்த திட்டத்தை நாசப்படுத்த முயற்சிப்பதாகவும், குற்றச்சாட்டுகள் வருந்தத்தக்கது என்றும் அவர் கூறினார்.