நடிகைக்கு இரண்டாவது முறையாக கொரோனா!

Date:

பிரபல இந்தி நடிகை பாருல் சவுத்ரிக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் பாருல் சவுத்ரிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பாருல் சவுத்ரி கூறும்போது, “எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது கஷ்டமாக தெரியவில்லை. தற்போது 2வது முறை கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். உடம்பு வலி, தலை வலி இருக்கிறது. சோர்வாக உள்ளது. உடம்பில் தெம்பே இல்லை. வயிற்றுப்போக்கும் உள்ளது. எனது அம்மா, அப்பா. சகோதரிக்கும் கொரோனா தொற்று உள்ளது.

அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறோம். ஒரு முறை கொரோனா வந்தால் மீண்டும் வராது என்று இருக்காதீர்கள். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்