தெரணியகல பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் மீட்டர் தவறாக இடப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, அவிசாவெல்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று பொது சொத்துச் சட்டத்தின் கீழ் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
கும்புகுமமவில் 477 நீர் மீட்டர் மற்றும் பிற உபகரணங்கள் திருடப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஒரு திட்டத்தின் பொறியாளர் புகார் அளித்ததாக டிஐஜி கூறினார், அதைத் தொடர்ந்து திட்டத்தின் உத்தியோகத்தர் மற்றும் சாரதி பல நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, தெரணியகல பிரதேச சபையின் தலைவரின் வசம் 98 திருடப்பட்ட நீர் மீட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.