25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு: கமல் இரங்கல்

தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று விவேக் மறைவுக்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விவேக்கின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விவேக்கின் மறைவுக்கு கமல் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:

“நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment