தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வீட்டு மங்கள நிகழ்வில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார்.
சி.சிறிதரனின் புதல்வியின் பூப்புனித நீராட்டு விழா இன்று யாழ் புறநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சிறிதரன் நேரில் சென்று, விக்னேஸ்வரனிற்கு அழைப்பு கொடுத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்டு, இன்று நிகழ்வில் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.
இது தவிர, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அண்மையில், முதலமைச்சர் வேட்பாளரிற்கு மாவை சேனாதிராசா பொருத்தமற்றவர் என விக்னேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பின்னர், முதல் முறையாக இருவரும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது, மிகச்சில வார்த்தைகள் இருவரும் பேசிக்கொண்டனர்.