உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சகோதரர்களின் சந்தையான கோடீஸ்வர தொழிலதிபர் இப்ராஹிம் ஹாஜியாரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 100 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஏக்கருக்கும் அதிகமான மிளகு தோட்டங்கள் மற்றும் வணிகங்களை இப்ராஹிம் குடும்பம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்வதற்கு முன்னர், அவர்களுக்கு சொந்தமான ஒரு சொகுசு வீட்டை பதிவுகளில் மாற்றம் செய்து விற்பனை செய்ய முயற்சித்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
1
+1
2
+1