இலங்கைக்குள் சீனாவின் மாநிலத்தை உருவாக்க அனுமதிக்க மாட்டோம்!

Date:

இலங்கைக்குள் வேறொரு நாட்டின் மாநிலத்தை நிறுவுவதற்கான நடவடிக்கையை தாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று ஜாதிக ஹெல உருமயவின் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சீனக் கொலனியாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்க அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்ற போரை நடத்திய பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாடு 30 ஆண்டுகாலம் யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்ற இப்போது ஒரு ஆயுதப் போராட்டமின்றி வேறு வழிகளில் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த வரைபு நிறைவேற்றப்பட்டால், 1,115 ஏக்கர் நிலத்தின் கட்டுப்பாட்டை சீனாவிடம் இலங்கை இழக்கும் என்று குறிப்பிட்டார்.

துறைமுக நகர சட்ட வரைபின்  விளைவுகள் குறித்து பொதுமக்களின் பிரதிநிதிகள் அறிந்திருக்கிறார்களா?, நாட்டின் ஒரு பகுதியை சீனாவுக்கு ஒப்படைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க தயாராக இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினர்.

ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நாட்டை நிர்வகிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர், இலங்கையின் சில பகுதிகளை வெளிநாட்டு சக்திகளிடம் ஒப்படைக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தினார்.

இலங்கையின் எந்தப் பகுதியையும் நிர்வகிக்க மற்ற நாடுகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்