யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்க தொடங்கும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
இன்று (16) யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமையில் இருந்து முழுமையாகச் ஏற்படுவதற்குரிய முன்னேற்பாடுகளை எடுத்திருக்கிறோம். கல்வியை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும். மாணவர்களின் கல்வியை நிறுத்தி வைக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திருமண மண்டபங்களிற்கான கட்டுப்பாடுகளை மீதும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் படி சுகாதாரப் பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதனால் கல்வி நடவடிக்கைகள் தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து தடைகளும் கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும். ஆலயங்கள் வழிபாட்டு இடங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர மக்களை நாங்கள் கேட்கிறோம்.