எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் க.வி.விக்னேஸ்வரனின் பொதுவேட்பாளராக களமிறங்க தயாரில்லையென வேலன் சுவாமி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சில போராட்டங்களில் கலந்து கொண்டிருந்த வேலன் சுவாமிகளை, மாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கலாமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் குபீர் அறிவிப்பொன்றை விடுத்தார்.
அந்த அறிவிப்பு பல தரப்பினால் காட்டமாகவும், சில தரப்பினால் நகைச்சுவையாகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
போதாதற்கு, மாவை சேனாதிராசாவிற்கு தகுதியில்லை, வேலன் சுவாமிகளிற்கு தகுதியுள்ளதென கூறி, தனது அரசியல் தராதரத்தையே விக்னேஸ்வரன் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டார்
இந்த நிலையில், வேலன் சுவாமிகள் இதற்கு விளக்கமளித்துள்ளார்.
அவரது விளக்கத்தில்-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அடிப்படை கொள்கைகளில் ஒன்று, அங்கத்தவர்கள் யாரும் கட்சி சார்ந்த அரசியலிலோ அல்லது தேர்தல் அரசியலிலோ ஈடுபட மாட்டோம் என்ற கொள்கைக்கு அடியேனும் விதிவிலக்கல்ல“ என தெரிவித்துள்ளார்.