வடமாகாணத்தில் நாளை- 17ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில்,
வடக்கில் பொதுவாக தற்போது காலை வேளைகளில் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இலங்கையின் வளிமண்டலத்தில் கீழ் காற்றழுத்த தாழ்வுநிலை காணப்படுவதால் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக கிடைக்க வாய்ப்புள்ளது.
இக்காலப்பகுதியில் கிடைக்கும் மழை மேற்காவுகை மழை அல்லது வெப்பசலன மழை எனப்படும்.
இடி, மின்னல் ஏற்படும் போது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதுடன், மற்றையவர்களையும் அறிவுறுத்த வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1