ஹல்தும்முல்ல, கலூபஹன பகுதியில் வெலிஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரையும் மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன. இளம் ஜோடி மீட்கப்பட்டது.
மகரகம பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் குளிக்கச் சென்றனர். அதில் திருமணமான இளம்ஜோடியொன்றும் இருந்தது.
திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கினர்.
இதில் தந்தையும் மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இளம்ஜோடி பாறைகளில் ஏறி தப்பித்தது. அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, அந்த பகுதி மக்களால் சிரமத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1