பௌத்த பிக்குகள் எப்போதுமே நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள். அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக முன்நிற்க தயங்க மாட்டார்கள் என்று அபயராம விகாரையின் தலைமை விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பௌத்த பிக்குகளை யாரும் மௌனமாக்க முடியாது என்று கூறினார்.
நாட்டின் சட்டங்களை மாற்றவோ அல்லது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டத்தை இயற்றவோ யாராவது முயன்றால், கடுமையாக எதிர்ப்போம் என்று தேரர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், ஆனால் சொந்த நலன்களைக் கொண்ட நபர்களின் கோரிக்கைகளுக்கு தலைவணங்க மாட்டோம் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.
கொள்கை அறிக்கையின் அடிப்படையில் செயல்படும் வரை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று கூறினார்.