கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் பற்றைக்காட்டுக்குள் மறைத்து விடப்பட்ட கார் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். பளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் கார் மீட்கப்பட்டது.
கடவத்தையிலுள்ள தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இந்த கார், கடத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் மறைத்து விடப்பட்டுள்ளது.
கொழும்பில் காரை வாடகைக்கு அமர்த்திய 25 வயதான இரண்டு இளைஞர்கள், நுவரெலியா, வலப்பனை பகுதியில் சாரதியை தாக்கி விட்டு, காரை கடத்தி சென்றனர்.
நேற்று (14) கார் மீட்கப்பட்டது.
காரின் முன் பகுதியில் சில இரத்தக்கறைகள் மட்டும் காணப்பட்டன.
சந்தேகநபர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
2
+1