24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

அசத்தலான புதிய சலுகைகளுடன் சாம்சங் கேலக்ஸி A32 !!

கேலக்ஸி A32 ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் உடனடி கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி A32 இல் நுகர்வோர் பெறக்கூடிய No Cost EMI விருப்பங்கள் போன்றவை அடங்கும்.சாம்சங் கடந்த மாதம் கேலக்ஸி A32 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.21,999 ஆகும்.

  • கேலக்ஸி A32 இல் சாம்சங் நிறுவனம் ரூ.1,500 உடனடி கேஷ்பேக்கை வழங்குகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள்.
  • ஸ்மார்ட்போனில், ரூ.1,500 உடனடி கேஷ்பேக்கைப் பெறலாம்.
  • இது EMI பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். இதோடு No cost EMI விருப்பங்கள் மற்றும் ஜீரோ டவுன் பேமெண்ட் மற்றும் செயலாக்க திட்டங்கள் எதுவும் இல்லா விருப்பங்களுடனும் இதை வாங்க முடியும்.
  • இந்த சலுகைகள் அனைத்தையும் ஒன்றாக பெறும்போது, கேலக்ஸி A32 போனை ரூ.18,999 விலையில் வாங்க முடியும்.
  • இந்த மாத தொடக்கத்தில், கேலக்ஸி A32 இல் சாம்சங் ரூ.3,000 மதிப்புள்ள அப்கிரேட் வவுச்சரையும் அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் தொலைபேசியில் ரூ.2,000 வரை கேஷ்பேக்கையும் வழங்கியது.
கேலக்ஸி A32 விவரக்குறிப்புகள்
  • விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, கேலக்ஸி A32 6.4 இன்ச் முழு HD+ இன்ஃபினிட்டி-U AMOLED டிஸ்ப்ளே 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது.
  • இது திரையில் கைரேகை ரீடருடன் வருகிறது. மென்பொருள் முன்னணியில், கேலக்ஸி A32 ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1 இல் இயங்குகிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G80 செயலி 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இது 5,000 mAh பேட்டரியையும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
  • கேமரா பிரிவில், சாம்சங் கேலக்ஸி A32 இல் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் 123 டிகிரி கோணத்துடன், 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment