யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3வது பொலிஸ் உத்தியோகத்தர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (15) காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிற்கு துரித அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று உறுதியானது.
இன்று அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அண்மை நாட்களில் யாழ் பொலிஸ் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட 3வது தொற்றாளர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1