நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது,
மகாரகம அபேக்ஷா மருத்துவமனையில் இருந்தபோது, கோவிட் -19 நேர்மறை என அடையாளம் காணப்பட்ட பின்னர், தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட, தெனியாயவை சேர்ந்த 34 வயது ஆண் நேற்று (14) காலமானார். COVID- தொற்று மற்றும் இரத்த புற்றுநோயால் உயிரிழந்தார்.
பன்னிப்பிட்டியை சேர்ந்த 62 வயது ஆண், கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
எல்லக்கலவை சேர்ந்த 72 வயது ஆண் நேற்று உயிரிழந்தார்.
கபுலியத்தவை சேர்ந்த 78 வயது ஆண் இன்று கண்டி தேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார்.
COVID-19 நோய்த்தொற்று மற்றும் நிமோனியா மற்றும் பிற சுகாதார சிக்கல்களால் மூவரும் உயிரிழந்தார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1