முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (15) மாலை இந்த துயரம் இடம்பெற்றது.
நேற்று 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்ப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று மாலை கனமழையும் மின்னல் தாக்கமும் ஏற்ப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய
கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்ணன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே உயிரிழந்தவர்களாவர்