28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் காணியற்றவர்களிற்கு 15 ஏக்கர் சொந்தக்காணியை பகிர்ந்தளித்த சமூக ஆர்வலர்!

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்  என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சித்திரை புத்தாண்டு தினத்தில் இடம்பெற்றது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில் இந் நிகழ்வு வைபவ ரீதியாக பயனாளிகளுக்கு காணி உறுதி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டது.

கிரானிலுள்ள சமூக ஆர்வலரான குருசுமுத்து வி.லவக்குமார் என்பவரே தமக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் காணியினை 224 பேருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில்  வறுமமை நிலையில் வாழும்,வாடகை வீட்டில் உள்ளோர்.மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்வு கருதி இவ் காணி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.பயணாளிகளின் பிள்ளைகளின் கல்வி,  மேம்பாடு,பொருளாதாரம் விருத்தி கருதி இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாக நண்கொடையாளர் வி.லவக்குமார் தெரிவித்தார்.

இதில் பொது தேவைகளான மத ஆலயம், பாடசாலை போன்றவற்றிக்கும் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அத்துடன் குடியிருப்பாளர்களின் எதிர்கால தேவை, வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அருட்தந்தை நியூட்டன் அடிகளார், சகலமத ஜயப்பன் யாத்திரை குழு குருசாமி சாம்பசிவம் புனிதாபரன் மற்றும் இளைப்பாறிய மரமுந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளர் டி.நிதர்சன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் காணி வழங்குனருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment