முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பண்டிகை கால முற்பணம்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழக்கப்படவில்லை ஆசிரியர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டுக்கான பண்டிகை கால முற்பணம் வடக்கு மாகாணத்தின்
அனைத்து வலயங்களிலும் வழங்கப்பட்ட போதும் துணுக்காய் வலயத்தில் மாத்திரம்
பண்டிக்கை முன் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை எனவும், அதிகாரிகளின்
அலட்சியமே காரணம் எனவும் ஆசிரியர்களும் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இக் கொடுப்பனவு பண்டிக்கை பின்னர் வழங்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவு அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே இது தொடர்பில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது, வழமையாக பண்டிகை கால முற்பணம் சம்பளத்துடன் கிடைக்கப்பெறும். ஆனால் இம்முறை அவ்வாறு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவும், மற்றும் திடிரென பண்டிகைக்கு முன் கடந்த திங்கள் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டமையாலும் உரிய காலத்தில் கிடைக்காமல் இருந்திருக்கலாம். இருப்பினும் இதுவரை தங்களுக்கு பண்டிக்கை கால முற்பணம் கிடைக்கவில்லை என எந்தவொரு ஆசிரியரும் அல்லது பணியாளரும் தனது கவனத்திற்கு கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார்.