புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் சிவில்பாதுகாப்பு உத்தியோகத்தரும் குடும்பஸ்தருமான ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தேராவில் பகுதியினை சேர்ந்த ரங்கசாமி ரவிசங்கர் (52) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (15) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் காலை வேளை பணிக்கு செல்ல தயாரான நிலையில் தவறான முடிவெடுத்து வீட்டின் முன் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்வருவதுடன் மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1