Pagetamil
சினிமா

குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டிவெற்றியாளர் கனி!

‘குக் வித் கோமாளி’ இறுதிப் போட்டியில் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார்.

விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையல் நிகழ்ச்சியான இதில் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் கோமாளிகளின் சேட்டைகளைச் சகித்துக் கொண்டு சமைத்து முடிக்க வேண்டும். இதில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, தங்கதுரை உள்ளிட்டோர் இடம் பெற்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் இரண்டாவது சீசனுக்குப் பெரும் வரவேற்பு நிலவியது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இரண்டாவது சீசனில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரசிகர்களின் வற்புறுத்தலால் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டது. வாரந்தோறும் இந்நிகழ்ச்சியை பற்றி மீம்களும் கோமாளிகளின் நகைச்சுவை வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்நிலையில் இந்த சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அஸ்வின், ஷகிலா, கனி, பவித்ரா, பாபா பாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றனர். இதில் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார். அவருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அவருடன் கோமாளியாக இருந்த சுனிதாவுக்கு 1 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. ஷகிலா மற்றும் அஸ்வின் இருவரும் ரன்னர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகள்:

எனர்ஜிடிக் பார்சன் விருது – பாபா பாஸ்கர்
கொஞ்சும் தமிழ் விருது – சுனிதா
வொண்டர் உமன் விருது – கனி
ஏஞ்சல் ஆஃப் குக் வித் கோமாளி – ஷகிலா
திடீர் கோமாளி விருது – தங்கதுரை
டெர்மினேட்டர் விருது – பவித்ரா லட்சுமி
கண்டென்ட் குயின் விருது – மணிமேகலை
சைலன்ட் கில்லர் விருது – ரித்திகா
டாம் இன் குக் விருது – தர்ஷா
கவுண்டர் கிங் விருது – பாலா
காமெடி ஐகான் விருது – மதுரை முத்து
எங்க வீட்டுப் பிள்ளை விருது – சிவாங்கி
எக்ஸ்பிரஸ் இன் கிங் விருது – புகழ்
டார்லிங் ஆப் குக் வித் கோமாளி – ரக்‌ஷன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment