இந்தியாவில் ஒரே நாளில் 1,027 பேரை பலியெடுத்த கொரோனா!

Date:

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் தினந்தோறும் உச்சம் பெற்று வரும் நிலையில் கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய-மாநில அரசுகள் முடுக்கி விட்டு உள்ளன. அதேநேரம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து இந்தியாவை தாக்கி வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி சற்று அதிகரித்துள்ளது. இன்று 1,027 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 085 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த வைரஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 036 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 லட்சத்து 65 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்