உலகம் முக்கியச் செய்திகள்

நீண்ட போரை முடிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு: ஆப்கானிலிருந்து படைகள் திரும்புகின்றன!

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்க படையினர் முழுமையாக திரும்பப்பெறப்படுவர் என ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க படையினர் 2,500 பேரும், நோட்டோ படையினர் சுமார் 7,000 பேரும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலிபான்கள்-ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற ட்ரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே 1ஆம் திகதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தலிபான்களுடனான ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் திரும்ப்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் அல்கொய்தா அமைப்பினரால் தாக்கப்பட்டது. அந்த கோர சம்பவத்தின் 20வது ஆண்டு நிறைவு, வரும் செப்டம்பர் 11ஆம் திகதி அனுசரிக்கப்பட உள்ளது.

அந்த நாளுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரும் திரும்பப் பெறப்பட உள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

அப்போது ஜோ பைடன் பேசியதாவது,

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப் பெறுவதற்கான நடைமுறைகளை அமெரிக்கா மே 1ஆம் திகதி முதல் தொடங்கும். இந்த வெளியேற்றம் அவசர அவசரமாக நடைபெறாது. பலத்தை குறைக்கும்போது தலிபான்கள் தாக்குதல் நடத்தினால் எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எங்களையும், எங்கள் கூட்டளிகளையும் பாதுகாப்போம் என்று தலிபான்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

செப்டம்பர் 11 தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும். ஆனால், பயங்கரவாத அச்சுறுத்தல்களில் நாங்கள் கவனமாக இருப்போம்.

அப்பகுதியில் உள்ள பிற நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். நிலையான ஆப்கானிஸ்தானுக்கு இந்த நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 2,500 வீரர்களையும் அமெரிக்கா திரும்பப்பெறுவது சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருத்தப்படுகிறது.

சமீபத்திய வரலாற்றில், ஆப்கான் போரே அமெரிக்காவின் நீண்ட போராகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்தில் 261 பேர் பலி: மீட்புப் பணிகள் நிறைவு!

Pagetamil

இந்தியாவில் ரயில் விபத்து: உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900க்கு மேற்பட்டோர் காயம்

Pagetamil

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!