ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சீமான் சொல்வதில் நூறில் ஒன்றுதான் உண்மையாக இருக்கும்- குறிப்பாக பிரபாகரன் பற்றி அவர் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.
விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் திரைப்படம் இயக்குவதற்காக மட்டும் கிளிநொச்சி வரவழைக்கப்பட்ட இயக்குனர் சீமான், புலிகள் அழிந்ததை தொடர்ந்து இல்லாத பொல்லாத பொய்களை சொல்லி அரசியல் செய்து வருகிறார்.
சீமானின் இந்த கதைகளை நம்பி, புலம்பெயர் தமிழர்கள் பலரும் அவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், திரைப்படம் இயக்க மட்டுமே சீமான் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டார் என்ற உண்மையை கூறியிருந்தார்.
இதனால் கொதிப்படைந்த நாம் தமிழர் கட்சியினர் அனந்தி சசிதரனை வறுத்தெடுத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்படியான வீடியோக்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண அழுத்துங்கள்