உலகின் மிகப்பெரிய முயல் என கின்னஸ் புத்தகத்தில் பதிவான முயல் திருடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து முயல் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
பிரித்தானியாவின், வொர்செஸ்டர்ஷையரில் உள்ள உரிமையாளரின் வீட்டில் இருந்து முயல் திருடப்பட்டுள்ளதாக மேற்கு மெரிக்கா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
129 சென்டிமீட்டர் நீளமுள்ள முயல் சனிக்கிழமையன்று திருடப்பட்டதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.
டேரியஸ் என்ற அந்த முயல், 2010 ஆம் ஆண்டில், மிகப்பெரிய முயலாக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியது.
டேரியஸின் உரிமையாளரும் பராமரிப்பாளருமான அன்னெட் எட்வர்ட்ஸ் முயல் பற்றிய தகவல் வழங்குபவர்களிற்கு 1,000 பவுண்ஸ் பரிசு அறிவித்துள்ளார். எட்வர்ட்ஸ் திருட்டை ஒரு “மிகவும் சோகமான நாள்” என்று குறிப்பிட்டார்.
ட்விட்டரில், எட்வர்ட்ஸ் முயலை எடுத்துச் சென்றவர்களிடம் அதைத் திருப்பித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். “தயவுசெய்து அவரை மீண்டும் கொண்டு வாருங்கள்”, என்று அவர் கூறினார்.
திருடர்கள் பிடிபட்டு, டேரியஸை அவரது உரிமையாளரிடம் திருப்பித் தரும்படி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொலிசார் தற்போது குடிமக்களை வலியுறுத்துகின்றனர்.