திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணொருவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
இளம் கணவனும் மனைவியும் கடந்த வருடம் திருமணம் முடித்த நிலையில் தினமும் குடும்ப சண்டைகள் பிடிப்பதாகவும், இருவரும் சரியாக கதைப்பதும் இல்லையெனவும் அயலில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினமும் சண்டை ஏற்படவே விரக்தியில் மனைவி 25 மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாக அயல் வீட்டுக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கணவனை பொலிஸார் கைது செய்து தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.