யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
யாழ் பொலஸ் நிலையத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. நாளை அதன் முடிவுகள் வெளியாகும்.
இதேவேளை, அவருடன் தொடர்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1